உலக செய்திகள்

தாய்லாந்து: சிறுவர்களை குகைக்குள் அழைத்துச்சென்றதற்காக மன்னிப்பு கோரிய பயிற்சியாளர் + "||" + Thailand cave rescue: Football coach of trapped Thai boys offers apology to their parents

தாய்லாந்து: சிறுவர்களை குகைக்குள் அழைத்துச்சென்றதற்காக மன்னிப்பு கோரிய பயிற்சியாளர்

தாய்லாந்து: சிறுவர்களை குகைக்குள் அழைத்துச்சென்றதற்காக மன்னிப்பு கோரிய பயிற்சியாளர்
சிறுவர்களை குகைக்குள் அழைத்துச்சென்றதற்காக பயிற்சியாளர் மன்னிப்பு கோரி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். #Thailandcave
மே சாய், 

தாய்லாந்தில்  குகைக்குள் சிக்கிய ஜூனியர்  கால்பந்து வீரர்கள் 12 பேரின் பயிற்சியாளர், ஆபத்தை அறியாமல் சிறுவர்களை குகைக்குள் அழைத்துச்சென்றதற்காக, அவர்களின்  பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை நீர்மூழ்கி வீரரிடம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், “ அனைத்து சிறுவர்களும் பத்திரமாக உள்ளனர். 

சிறுவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என்று உங்களிடம் நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் அனைவரும் அளிக்கும் தார்மீக ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிறுவர்களின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தாய்லாந்து கடற்படையின் முகநூல் பக்கத்தில் இந்த தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

9 நாட்களாக இருளில் இருந்த போதும், சிறுவர்களுக்கு தைரியம் அளித்து, உணவுகளை பகிர்ந்து கொடுத்து மிகவும் அக்கறையுடன் செயல்பட்டதாக கால்பந்து பயிற்சியாளருக்கு பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்த போதிலும், ஒரு தரப்பினர், சிறுவர்களை குகைக்குள் அழைத்துச்சென்றதற்காக பயிற்சியாளரை மீது குற்றம் சாட்டி விமர்சனம் செய்து வரும் நிலையில், மன்னிப்பு கோரி பயிற்சியாளர் கடிதம் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.