தேசிய செய்திகள்

கல்வீசியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி, காஷ்மீரில் பதற்றம் + "||" + 3 Including Teenager Killed In Kashmir As Forces Fire At Stone Throwers

கல்வீசியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி, காஷ்மீரில் பதற்றம்

கல்வீசியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 

பேர் பலி, காஷ்மீரில் பதற்றம்
கல்வீசியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் குல்காம்  மாவட்டத்தில் உள்ள ரெட்வானி பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது ஒரு கும்பல் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, கல்வீச்சாளர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 16-வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூட்டில் 3 பலியான மூன்று பேரின் அடையாளங்களும் தெரியவந்துள்ளது. அனைவரும் குல்காமில் உள்ள ஹவூரா பகுதியைச்சேர்ந்தவர்கள் ஆவர். 

துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வதந்திகள் மற்றும் போராட்டங்கள் பரவாமல் தடுக்கும் நோக்கில், குல்காம், அனந்தநாக் ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
3. ஜம்மு காஷ்மீர் : உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்: தலைமை போலீஸ் அதிகாரி திடீர் மாற்றம்
ஜம்மு காஷ்மீரின் தலைமை போலீஸ் அதிகாரி எஸ்.பி வாய்ட், நேற்று இரவு திடீரெனெ அப்பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கண்களை தோண்டியெடுத்த 14 வயது சிறுவன்
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கண்களை தோண்டியெடுத்த 14 வயது சிறுவன் மற்றும் மாற்றாந்தாய் கைது செய்யப்பட்டு உள்ளனர்.