மாநில செய்திகள்

நகைக்காக 9ம் வகுப்பு மாணவியை கொலை செய்த மற்றொரு மாணவிக்கு தண்டனை + "||" + For Jewelry The 9th grade student was murdered Another student is convicted

நகைக்காக 9ம் வகுப்பு மாணவியை கொலை செய்த மற்றொரு மாணவிக்கு தண்டனை

நகைக்காக 9ம் வகுப்பு  மாணவியை கொலை செய்த மற்றொரு மாணவிக்கு தண்டனை
நகைக்காக 9ம் வகுப்பு மாணவியை கொலை செய்த மற்றொரு மாணவிக்கு 6 மாதங்களுக்கு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் என விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமம் தீர்ப்பு வ்ழங்கி உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்ற  லாரி ஓட்டுநரின் மகள் சசிரேகா, ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியில்  9-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற  மாணவி சசிரேகா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா சடலமாக மீட்கப்பட்டார். 

இது தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அதே பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு  மாணவி,  நகைக்காக சசிரேகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில்  மாணவி, வரும் 10 ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு பகல் நேரங்களில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் என நீதிபதி மும்தாஜ் தீர்ப்பளித்தார்.