தேசிய செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது + "||" + Amarnath yatra resumes from Jammu after 2-day suspension

2 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

2 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
ஜம்மு காஷ்மீரில் 2 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. #Amarnathyatra
ஜம்மு,

ஆண்டு தோறும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். கடந்த ஆண்டு இந்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இந்த ஆண்டு யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்ரீகர்களின் வாகனங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி துவங்கியது. அமர்நாத் யாத்திரை  ஆகஸ்ட் மாதம் இறுதி வரை  நடைபெற உள்ளது.

மோசமான வானிலை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் யாத்திரை கடந்த வியாழன் அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், வானிலை சீரானதும் இரண்டு நாட்களுக்கு பிறகு யாத்திரை மீண்டும் இன்று தொடங்கியது. பாகல்காம் வழித்தடத்தில் யாத்திரை மேற்கொள்ளும் 8-வது குழுவை சேர்ந்த 311 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 203 பேர் இன்று பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து 51 வாகனங்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

மேலும், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்காங்கே சிக்கித்தவிக்கும் யாத்ரிகர்ளை காஷ்மீர் மாநில டி.ஜி.பி. வைட் பல்வேறு இடங்களில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதுவரை 73 ஆயிரத்து 023 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.