தேசிய செய்திகள்

கணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர் + "||" + NEET & JEE exams to be conducted 2 times in a year-Union Minister P Javadekar

கணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்

கணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்
கணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் என மனித வள மேம்மாபாட்டுத் துறை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். #NEET #PrakashJavadekar
புதுடெல்லி

டெல்லியில்  மனித வள மேம்பாட்டுத் துறை  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும்.

ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும். எழுத்து தேர்வாக இல்லாமல் கணினி தேர்வாக நடத்தப்படும் 

தேர்வு கணினி முறையில் நடைபெற உள்ளது. பாடத்திட்டம் தேர்வுகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை. 

தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.

மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும்.

மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது. 

தேர்வுகள் இரண்டு கட்டமாக நடப்பதால் மாணவர்கள் மொத்தமாக தேர்வு எழுதுவது தடுக்கப்படும் என கூறினார்.