தேசிய செய்திகள்

வரும் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு + "||" + PM Narendra Modi addresses a public meeting in Jaipur

வரும் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

வரும் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும் ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
வரும் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #NarendraModi
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சுமார் 2½ லட்சம் பேர் பயன் அடைந்து இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையொட்டி தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஏற்பாடு செய்தார்.  இந்த பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெய்ப்பூர் வந்தடைந்தார். அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றினார்.  முன்னதாக  ராஜஸ்தானில் ரூ. 2,100 கோடி செலவில் 10 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ராஜஸ்தானில் முதல்-மந்திரி வசுந்த்ரா சிறப்பாக செயல்படுகிறார். பாஜக ஆட்சியின் கீழ் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் தற்போது பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக வளர்ந்து வருகிறது. கடந்த 4  ஆண்டுகளில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர். 

ராஜஸ்தானில் தண்ணீர் வசதி, மின்சார வசதி பெருகியுள்ளது. வரும் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக பெருகும். இதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். 32 கோடி பேருக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது, சமையல் காஸ் விநியோகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் இந்த மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்றனர். 

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.