உலக செய்திகள்

உலகின் பணக்கார பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடம் + "||" + Mark Zuckerberg tops Warren Buffett to become third-richest person in the world

உலகின் பணக்கார பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடம்

உலகின் பணக்கார பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடம்
உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #MarkZuckerberg
நியூயார்க்,

உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்சும், 2-வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளனர். 

இந்த நிலையில் 3-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மார்க் ஜூகர்பெர்க்  சொந்து மதிப்பு  5.61 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.   இது பப்பெட் சொத்தை விட 2,565 கோடி ரூபாய் அதிகமாகும். 

உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.