கால்பந்து

இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு + "||" + Sweden players forced out of team hotel by early morning fire alarm

இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு

இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில்  எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ள சுவீடன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவீடன் கால்பந்து வீரர்கள் சமரா என்னுமிடத்திலுள்ள ஒரே ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இன்று காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர் கொள்ள இருக்கும் நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுவீடன் வீரர்களின் தூக்கம் தீ எச்சரிக்கை மணியால் தொந்தரவு செய்யப்பட்டது.ஸ்வீடன் அணி வீரர்கள் சிவந்த கண்களுடனும் குழப்பத்துடனும் ஹோட்டலின் வரவேற்பறையில் கூடினர்.

அதே ஒட்டலில் இருந்த இங்கிலாந்து அணியின் ரசிகரான ஒருவர், தங்கள் வாழ்நாளின் மிக முக்கியமான போட்டி நடக்க இருக்கும் நிலையில் நிச்சயமாக தங்கள் தூக்கம் கெட்டது குறித்து நிச்சயம் ஸ்வீடன் அணி வீரர்கள் கவலை அடைவார்கள் என்று கூறினார்.

இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு சாதகமான ஒரு விடயம், தங்கள் தூக்கம் கெட்டதால் நிச்சயம் ஸ்வீடன் வீரர்கள் சற்று களைப்பாகத்தான் இருப்பார்கள் என்றார் அவர். இன்னொரு இங்கிலாந்து ரசிகர், ஸ்வீடன் வீரர்களுக்கு இப்படி நிகழ்ந்தது குறித்து நான் சிறிது வருத்தம் அடைகிறேன், அவர்கள் மிகவும் அருமையானவர்கள், மட்டுமின்றி எங்களுடன் மிகவும் நட்பாக இருப்பார்கள் என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...