தேசிய செய்திகள்

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு - தம்பிதுரை + "||" + Parliament and Assembly should not be held simultaneously The position of the high summi Tampidurai

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு - தம்பிதுரை

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு - தம்பிதுரை
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என தேர்தல் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைந்த பின் தம்பிதுரை பேட்டி அளித்தார். #Tampidurai
புதுடெல்லி

வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று கூறப்படுகிறது

2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம்   சட்ட ஆணையம் திட்டமிட்டது. அதன் படி   இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியது

இந்த கருத்து கேட்பு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் உள்பட அ.தி.மு.க எம்பிக்கள் கலந்து கொண்டனர் 

ஒரே நாடு, ஒரே தேர்தல் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைந்த பின் தம்பிதுரை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவை தேர்தலுடன் தமிழக பேரவைக்கு தேர்தல் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளோம். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் அறிய வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

நாடாளுமன்றத்திற்கு தனியாகவும், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தனியாகவும் தேர்தல் நடத்தலாம்.  மத்திய அரசுக்கு, நாங்கள் உறுதுணையாக இல்லை.

2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம், 2024-ல் வேண்டுமானால் நடத்தலாம். ஆட்சியை கலைத்து தேர்தல் கொண்டுவரக் கூடாது. என கூறினார்.