மாநில செய்திகள்

ரவுடி ஆனந்தனின் கூட்டாளி அரவிந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் + "||" + Aravind Chengalpattu court Surrender

ரவுடி ஆனந்தனின் கூட்டாளி அரவிந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்

ரவுடி ஆனந்தனின் கூட்டாளி அரவிந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி அரவிந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் ராஜவேலுவை (வயது 35) அரிவாளால் வெட்டிய வழக்கில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த 9 ரவுடிகள்  கைது செய்யப்பட்டனர். இதில் ஆனந்தன் (25) என்ற ரவுடி, போலீஸ்காரர் ராஜவேலுவின் ‘வாக்கி-டாக்கி’யை திருடி தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் ரவுடி ஆனந்தனை மட்டும் தனியாக போலீஸ் ஜீப்பில் தரமணி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

சம்பவ இடத்தில் ‘வாக்கி-டாக்கி’யை எடுக்கும்போது, ரவுடி ஆனந்தன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் கையை வெட்டினார். பின்னர் உதவி கமிஷனர் சுதர்சனத்தையும் தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது ‘என்கவுண்ட்டர்’ பிரயோகம் நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சுதர்சன் ரவுடி ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது இடதுபக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலியானார். 

சென்னையில் காவலர் ராஜவேலுவை தாக்கிய வழக்கில் அரவிந்தனை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி அரவிந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...