உலக செய்திகள்

”உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை”தாய்லாந்து குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம் + "||" + Thai cave rescue: Parents’ letters delivered to trapped boys as air in cave deteriorates

”உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை”தாய்லாந்து குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம்

”உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை”தாய்லாந்து குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம்
உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை என்று பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். #Thaicave
தாய்லாந்து,

தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை   மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை  சேர்ந்த 2 நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து மீட்கும் பணியில் தாய்லாந்தின் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குகைக்குள் சிக்கியுள்ள பயிற்சியாளர், “என்னை மன்னித்துவிடுங்கள்! பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தை கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பதில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர். பெற்றோர்கள் எழுதிய கடிதத்தில்,

உங்களை குறைபட்டுக் கொள்ள வேண்டாம்.  உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை.  உங்களை முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம் என பயிற்சியாளர்களுக்கு பெற்றோர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.