தேசிய செய்திகள்

நள்ளிரவில் திருடனை தனியாக விரட்டி சென்று பிடித்த போலீஸ்: ஹனிமூன் பேக்கேஜ் கொடுத்து உயர் அதிகாரிகள் பாராட்டு + "||" + Bengaluru constable nabs robber in midnight chase, wins honeymoon trip to Kerala

நள்ளிரவில் திருடனை தனியாக விரட்டி சென்று பிடித்த போலீஸ்: ஹனிமூன் பேக்கேஜ் கொடுத்து உயர் அதிகாரிகள் பாராட்டு

நள்ளிரவில் திருடனை தனியாக விரட்டி சென்று பிடித்த போலீஸ்: ஹனிமூன் பேக்கேஜ் கொடுத்து உயர் அதிகாரிகள் பாராட்டு
நள்ளிரவில் திருடனை தனியாக விரட்டி சென்று பிடித்த போலீஸ்க்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பெங்களூர்,

பெங்களூரை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் வெங்கடேஷ்  கடந்த வியாழக்கிழமை சர்ஜாபுர் சாலை அருகே உள்ள பிக் பஜார் பக்கத்தில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் 2.45 மணிக்கு திடீரென திருடன்..திருடன்.. என சத்தம் கேட்டிருக்கிறது. உடனே சுதாகரித்துக் கொண்ட கான்ஸ்டபிள் வெங்கடேஷ் , நடந்த விஷயத்தை கனப்பொழுதில் புரிந்து கொண்டார்.

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஒருவரின் மொபைல் போனை பிடுங்கிக் கொண்டு வேகமாக சென்றதை வெங்கடேஷ்கண்டு சுதாரித்தார்.

உடனே நொடி பொழுதும் தாமதிக்காமல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வேகமாக கொள்ளையர்களை தூரத்திச் சென்றார் வெங்கடேஷ். சுமார் 4 கி.மீ வேக பயணத்திற்கு பின் அருண் குமார் என்ற கொள்ளையனை மடக்கிப் பிடித்ததோடு அவரிடம் இருந்த மொபைல் போனையும் கைப்பற்றினார். 

ஆனால் அருண்குமாருடன் வந்த மற்ற திருடர்கள் தப்பிச் சென்றுவிட்னர். யாரின் உதவியையும் எதிர்பார்க்காமல் துணிவாக சென்று கொள்ளையனை பிடித்தபோது ஹனுமந்திற்கு காயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து துணை கமிஷனர் கூறுகையில், வெங்கடேஷ்ற்கு இன்னும் கைகள், முட்டி என பல இடங்களில் காயம் இருக்கிறது. தைரியத்திற்கு வெங்கடேஷ் ஒரு உதாரணம். தனக்கு காயம் ஏற்பட்ட போதும் பல கி.மீ தூரம் தூரத்திச் சென்று கொள்ளையனை தைரியமாக பிடித்துள்ளார். 

இதுபோன்று தைரியமான, துணிச்சலான போலீசாரை ஊக்கப்படுத்துவது அவசியம். 

அவரின் துணிச்சலே கொள்ளையன் பிடிபடுவதற்கு காரணம். துறையில் இதுபோன்று ஒரு சிலர்தான் மிகவும் தைரியத்துடன் செயல்படுகின்றனர், தற்போது அருண் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வெங்கேஷ்சின் துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு 10,000 ரூபாய் பரிசுடன் 25,000 ரூபாய் மதிப்பிலான ஹனிமூன் பேக்கேஜ் வசதியையும் உயர் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். 

கடந்த நவம்பர் மாதம்தான் வெங்கடேஷ்ற்கு  திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே தாமதமாக அவர் கேரளாவிற்கு ஹனிமூன் செல்ல உள்ளார்.