கால்பந்து

உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி + "||" + World Cup 2018, Sweden vs England

உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

உலககோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
உலககோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018
மாஸ்கோ,

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் தேதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன. உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன. நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்றது. 

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என பிரேசிலை வென்றது. 

இந்தநிலையில்,  இன்று நடைபெற்ற  சுவீடனுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஸ்வீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.  இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.