மாநில செய்திகள்

கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை + "||" + Sri Lankan Navy arrested four TN fishermen between Katchatheevu and Neduntheevu

கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமநாதபுரம்,

தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது வாடிக்கையாகி விட்டது.  இந்த நிலையில், தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருந்து உள்ளனர்.

அவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  அதன்பின் மீனவர்களிடம் இருந்து ஒரு படகையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளது.  அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை சிறையில் இருந்து 28 மீனவர்கள் விடுவிப்பு - ஓரிரு நாளில் தமிழகம் திரும்புகிறார்கள்
இலங்கை சிறையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 28 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. பக்ரைனிலிருந்து மீன் பிடிக்க சென்ற 30 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
பக்ரைனிலிருந்து மீன் பிடிக்க சென்ற 30 தமிழக மீனவர்கள் சவுதி அரேபிய படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
3. கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
4. இலங்கை கடற்படையினரால் பிடித்து சென்றவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
5. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க நடவடிக்கை
தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.