உலக செய்திகள்

ஜப்பானில் பலத்த மழைக்கு 44 பேர் பலி; பிரதமர் அபே தலைமையில் அவசர கூட்டம் + "||" + 44 dead as record rains devastate parts of Japan

ஜப்பானில் பலத்த மழைக்கு 44 பேர் பலி; பிரதமர் அபே தலைமையில் அவசர கூட்டம்

ஜப்பானில் பலத்த மழைக்கு 44 பேர் பலி; பிரதமர் அபே தலைமையில் அவசர கூட்டம்
ஜப்பானில் பலத்த மழைக்கு பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது.
டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில், குறிப்பாக ஹோன்சு தீவு, ஷிகோகு தீவு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் மழை நீர், வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கெல்லாம் முடங்கி உள்ளது.

மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 44 பேர் உயிரிழந்து உள்ளனர் என அலுவல்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.  50 பேரை காணவில்லை.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.  தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

எனினும், பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளத்தில் வீடுகள் பல அடித்து போய்விட்டன.  இதில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 48 ஆயிரம் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மந்திரிசபை செயலாளர் யோசிஹிடே சுகா தெரிவித்தார்.

இந்த நிலையில், வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக சிறப்பு நெருக்கடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.  பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2. பலத்த மழை பெய்து வருவதால் உஷார் நிலையில் இருக்கும்படி 5 மாவட்ட கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவு
பலத்த மழை பெய்து வருவதால் உஷார் நிலையில் இருக்கும்படி 5 மாவட்ட கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய 21 பக்தர்கள் பத்திரமாக மீட்பு
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பாவூர்சத்திரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற 21 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். நெற்பயிர்கள் மூழ்கின. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
4. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய 3 அணைகள் நிரம்பின. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
5. கொளத்தூர் பகுதியில் மழை; மரம் வேரோடு சாய்ந்தது
ஆண்டிமடம் அருகே உள்ள ஆண்டிகொளத்தூர் பகுதிகளில் பெய்த பாலத்த காற்றுடன் பெய்த மழையில் திரவுபதி அம்மன் மரம் வேரோடு சாய்ந்தது.