தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திர சேகர ராவ் ஆதரவு + "||" + One nation, one election: JD(U), SP, TRS support simultaneous polls

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திர சேகர ராவ் ஆதரவு

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு  சந்திர சேகர ராவ் ஆதரவு
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். #ChandraSekharRao
ஐதராபாத்,

வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று கூறப்படுகிறது

2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்று கூறியுள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி ஆதரவு தெரிவிப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் கூறியுள்ளார்.