தேசிய செய்திகள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு முழு உதவி செய்வோம் - சுஷ்மா சுவராஜ் + "||" + Will provide all assistance to family of Indian killed in Kansas Sushma Swaraj

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு முழு உதவி செய்வோம் - சுஷ்மா சுவராஜ்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு முழு உதவி செய்வோம் - சுஷ்மா சுவராஜ்
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு முழு உதவியை செய்துக் கொடுப்போம் என சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். #SushmaSwaraj #SharathKoppu
புதுடெல்லி,

அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் உள்ள மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சரத் கொப்பு (வயது25) அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமையில் ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தில்  அடையாளம் தெரியாத நபரால் சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பி விட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸ், ஹோட்டலில் இருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில், பிரவுன் கலரின் வெள்ளை கோடிட்ட சட்டை அணிந்த நபர் சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.

 துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க வலைவீசிவரும் போலீஸ், குற்றவாளியை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் உதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் இரங்கல்

கனாஸ் ஹோட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் சரத் கொப்புவின் குடும்பத்தாருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு துணை நிற்போம், மாணவரின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


கனாஸ் சிட்டி ஹோட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் சரத் கொப்பு .

மென்பொருள் பொறியாளரான சரத் கொப்பு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், “கனாஸ் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அவருடைய குடும்பத்தார் மற்றும் போலீசுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம். எங்களுடைய அதிகாரிகள் கனாஸ் விரைந்துள்ளார்கள்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.