தேசிய செய்திகள்

மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் + "||" + Heavy Rain In Mumbai, Alert For Konkan

மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பை,

மும்பையில் கடந்த 2, 3-ந் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்தநிலையில்,  மும்பை ராய்காட், தானே மற்றும் பல்ஹார் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து மும்பை மாநாகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.