தேசிய செய்திகள்

அசாமில் எம்.எல்.ஏ மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் + "||" + Assam woman accuses AIUDF MLA of rape

அசாமில் எம்.எல்.ஏ மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார்

அசாமில் எம்.எல்.ஏ  மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார்
அசாமில் எம்.எல்.ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உதின் சவுத்திரி இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். 

தனது கணவர் உதவியோடு தன்னை எம்.எல்.ஏ  நிஜாம் 19-ம் தேதி 23-ம் தேதிகளில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளார்.  மேலும் வழக்கை வாபஸ் பெறுவதற்காக ரூபாய் 5 லட்சம் பேரம் பேசுவதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். 

தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாமில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.