மாநில செய்திகள்

8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் + "||" + The land is acquired only by the permission of the farmers RBUdayakumar

8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #RBUdayakumar
மதுரை,

சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நில அளவீடு பணி நடந்தது. தொடர்ந்து எல்லைக்கற்கள் நடப்பட்டன. தற்போது எல்லைக்கற்கள் நடப்பட்ட இடங்களில் உள்ள கிணறுகள், மரங்கள், விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் மற்றும் வீடுகள் உள்பட அனைத்தையும் அரசு துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில்,  மதுரை மாவட்டம் எஸ்.பி. நத்தத்தில் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் அனுமதியோடுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சென்னை, சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக ஆதாரமில்லாமல், விவரம் தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் தான் அதன் பயன் தெரியும்.  ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.