உலக செய்திகள்

தாய்லாந்து குகையில் சிக்கியிருக்கும் சிறார்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள்? சவால்கள் என்ன? + "||" + Narrow tunnel, zero visibility, challenges that rescuers of boys in Thai cave face

தாய்லாந்து குகையில் சிக்கியிருக்கும் சிறார்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள்? சவால்கள் என்ன?

தாய்லாந்து குகையில் சிக்கியிருக்கும் சிறார்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள்? சவால்கள் என்ன?
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க மீட்புக் குழு அதிரடியான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. #ThailandCaveRescue
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் சிக்கியிருக்கும் 12 சிறுவர்களையும், ஒரு பயிற்சியாளரையும் மீட்க மீட்புக் குழு அபாயகரமான ஆபரேஷனை தொடங்கி முன்னெடுத்துள்ளது.

மீட்பு குழு தீவிரம் காட்ட காரணம் என்ன?  

 கனமழை காரணமாக 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. ராட்சத இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில் மழைக் காலம் முடியும் வரையில் காத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதன்பொருள் அவர்கள் ஒருமாத காலம் உள்ளே இருக்க வேண்டிய நிலையிருக்கும் என்பது. குகையில் சிறார்கள் சிக்கியுள்ள பகுதிக்கு மேல் பகுதியில் துளையிட்டு அவர்களை காப்பாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கனமழை கொட்ட தொடங்கியது எந்தவிதமான மீட்பு பணிக்கும் சவாலாக எழுந்தது. மழை பெய்வது தொடர்வதால் உள்ளே சிக்கியிருக்கும் சிறார்கள் மேலும் மோசமான நிலையை எதிர்க்கொள்ள நேரிடும் என்ற நிலை ஏற்பட்டது.

 குகைக்குள் இருக்கும் நீரை வெளியேற்ற முடியாத நிலையில் மழை அதிகரிக்கும் சூழ்நிலையில் வெள்ளம் அதிகரிக்க சிறார்கள் உள்ள இடத்தையும் அது அடையும். மீட்பு குழுவினர் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே வானிலை மோசம் காரணமாக சிறார்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளது. தண்ணீர் அளவு குறைந்துள்ளது எனவும் மாகாணத்தின் ஆளுநர் கூறியுள்ளார். மற்றொரு நாள் தேவையில்லை, நாங்கள் தயாராக இருக்கிறோம். "இல்லையென்றால் நாங்கள் வாய்ப்பை இழப்போம்"எனவும் குறிப்பிட்டார். 

சிறார்களை வெளியே கொண்டுவருவது எப்படி?

இந்நிலையில் தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்களை கொண்டு சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.  முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர். அனுபவம்வாய்ந்த முக்குளிப்பவர்களாக இருந்தாலும் சிறார்கள் உள்ள இடத்திற்கு சென்றுவர 11 மணிநேரம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி 21:00 மணியளவில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது, அதிகாரி ஒருவர் பேசுகையில், அவர்களை வெளியே கொண்டுவர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.

அவர்கள் தண்ணீருக்குள் நடத்தல், உயர்வான இடங்களில் மேலே ஏறுதல், மற்றும் டைவிங் என பெரும் சவால்களை எதிர்க்கொண்டு வரவேண்டும். இதுவும் முழு இருட்டில், ஏற்கனவே அங்கு வழிகாட்டி கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. வெளியே வரும்போது முகம் முழுவதும் கவசம் அணிந்திருக்க வேண்டும். இது வழக்கமாக செய்யாதவர்களுக்கு எளிதாக இருக்காது. ஒவ்வொரு சிறுவருக்கும் இரண்டு முக்குளிப்பவர்கள் உதவியாக இருப்பார்கள், அவர்கள் சிறுவனுக்குமான ஆக்ஸிஜன் சப்ளையை உடன் எடுத்துச் செல்வார்கள். தண்ணீருக்குள் வரும் நிலையில் டி ஜங்சன் எனப்படும் மிகவும் குறுகிய மற்றும் இக்கட்டான நிலையை அவர்கள் கடக்கவேண்டும். 

மிகவும் குறுகலான இப்பகுதிக்குள் முக்குளிப்பவர்கள் ஆஜ்ஸிஜன் டேங்குகளுடன் பயணிக்க வேண்டும். அவர்கள் குகையின் பரந்த பகுதிக்கு வரும் நிலையில் மற்றவர்கள் உதவியை மேற்கொள்வார்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெறும். அபாயம் நிறைந்த பகுதியாக காணப்படும் இடத்தில் சிறார்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு சென்ற கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இப்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். 

 முழு இருட்டு, பீதி

குகையில் உள்ள தண்ணீர் மிகவும் சகதியாகவும் தெளிவற்ற நிலையிலும் உள்ளது. குறுகிய பாதையில் வெளி வெளிச்சம் இல்லாத நிலையில் பார்க்க முடியாத நிலையே தொடரும். ஏற்கனவே அங்கு கட்டப்பட்டுள்ள கயிறு மட்டுமே சிறார்களுக்கு துணையாக இருக்கும். நீச்சல் தெரியாமல் நீண்ட நாட்கள் குகைக்குள் இருக்கும் சிறார்களுக்கு முழு இருட்டில் இதுபோன்ற ஒரு பயணம் என்பது பீதியையையும் ஏறப்டுத்த வாய்ப்பிருக்கிறது. இதில் மனதில் வலிமை என்பது முக்கியமானது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒருவருடைய பயம், பெரும் பிரச்சனையையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும் குகையில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் வல்லுநரான அன்ட்ரெவ் வாட்சன் கூறுகிறார்.  

வானிலை

இப்போது அங்கு மழை அளவு குறைந்து வெள்ளம் அதிகமாக காணப்படவில்லை என்றாலும் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஞாயிறு மாலையில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி அனைவரும் எந்தஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ளாமல் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம், இதற்காக பிரார்த்தனையை செய்து வருகிறார்கள்.