பிற விளையாட்டு

ஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் தீபா கர்மாகர் தங்கம் வென்றார் + "||" + Dipa Karmakar wins gold in Gymnastics World Cup

ஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் தீபா கர்மாகர் தங்கம் வென்றார்

ஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் தீபா கர்மாகர் தங்கம் வென்றார்
காயம் காரணமாக 2 ஆண்டுகள் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் தங்கம் வென்றார். #DipaKarmakar #GymnasticsWorldCupதுருக்கி நாட்டின் மெர்சின் நகரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உலக கோப்பையில் முதல் முறையாக தீபா கர்மாகர் பதக்கம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக பங்கேற்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர். 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் புரோடுனோவா என்ற ஆபத்து நிறைந்த ஜிம்னாஸ்டிக் பிரிவில் நூழிலையில் பதக்கத்தை தவறவிட்டார். எனினும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

 4-வது இடத்தை பிடித்த பிறகு, பயிற்சியின் போது தீபாவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முழங்கால் பகுதியில் எலும்புகளை இணைக்கும் ஆன்டிரியர் கிருசியேட் லிகமன்ட் (ஏசிஎல்) எனப்படும் தசைநார் கிழிந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆபத்தானதாகக் கருதப்படும் அந்த காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தீபா, தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். முழங்கால் காயமோ, அதன் காரணமாக மேற்கொண்ட அறுவை சிகிச்சையோ தனது செயல்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார். அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

விரைவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் 10 நபர்கள் அடங்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவில் இடம்பெற்றுள்ளார். 

அதிகம் வாசிக்கப்பட்டவை