தேசிய செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 1.2 கோடி சம்பளம்: பெங்களூரு மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை + "||" + Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google

ஆண்டுக்கு ரூ. 1.2 கோடி சம்பளம்: பெங்களூரு மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை

ஆண்டுக்கு ரூ. 1.2 கோடி சம்பளம்: பெங்களூரு மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை
பெங்களூரு மாணவர் ஆதித்யா பல்லிவாலுக்கு ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
பெங்களூரு,

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் இயங்கி வருகிறது.  இதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய ஆராய்ச்ச்களை மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது. 

இதற்காக இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் பணியாற்றி உலகளவில் 50 பேர் தேர்வாகி உள்ளார்கள். 

அதன்படி இந்தியாவில் நடைபெற்ற நேர்முக தேர்வில், பெங்களூரின் இந்திய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் ஆதித்யா பல்லிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூ. 10 லட்சம் மாத சம்பளத்தில் ஆண்டிற்கு ரூ. 1.2 லட்சம் பெற உள்ளார்.

மும்பையை சேர்ந்த ஆதித்யா, நியூயார்க் நகரில் கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பிரிவில் பணியாற்ற உள்ளார்.

இது குறித்து ஆதித்யா பல்லிவால் கூறியதாவது:

கூகுளில் வேலை கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.  வரும் ஜூலை 16ம் தேதி பணியில் சேர உள்ளேன். இந்த நிலையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவை சேர்ந்த பலர் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னோடி நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். மேலும் ஆந்திராவை சேர்ந்த சத்யா நாத்தல்லா விண்டோஸின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

கூகுள் நிறுவனம் செயற்கை தொழில்நுட்பம் குறித்து   நடத்திய தேர்வில் கலந்து கொண்ட 6 ஆயிரம் பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஆதித்யா பாலிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.