மாநில செய்திகள்

ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை: திடீரென புகாரை வாபஸ் பெற்றார் மேலாளர் + "||" + Chidambaram home jewelery, money laundering

ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை: திடீரென புகாரை வாபஸ் பெற்றார் மேலாளர்

ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை: திடீரென புகாரை வாபஸ் பெற்றார் மேலாளர்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு போனதாக போலீசில் காலையில் புகார் அளிக்கப்பட்டது. #PChidambaram
சென்னை,

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப. சிதம்பரம்.  இவரது வீடு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது.  இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அவரின் வீட்டில் இருந்து ரூ.1.10 லட்சம் பணம், தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்தாக  ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென புகாரை ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி வாபஸ் பெற்றார்.   திருட்டு புகார் கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால், சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு நடந்ததா, இல்லையா என போலீசார் சந்தேக கோணத்தில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.