தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை கவலைக்கிடம் + "||" + Former UP And Uttarakhand CM ND Tiwari Shifted To ICU

உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை கவலைக்கிடம்

உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை கவலைக்கிடம்
உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். #NDTiwari
புதுடெல்லி, 

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி, மூளை செயல் இழப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார். 

92 வயதான என்.டி.திவாரிக்கு நேற்று  முதல் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து அவரது மகனான ரோகித் சேகர் திவாரி கூறுகையில், ‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார். 

அவர் உடல் நலம் பெற உத்தரகாண்ட் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.