தேசிய செய்திகள்

சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை + "||" + Underperforming UP Government Employees Above 50 May Be Asked To Retire

சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை

சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உத்தர பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை
உத்தர பிரதேசத்தில் சரியாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு ஓய்வு வழங்கப்படும் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #UPGovernment
லக்னோ,

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக  ஆட்சியை பிடித்தது.  அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக  பொறுப்பேற்றார். யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை உடனடியாக மூட அதிரடி உத்தரவிட்டார். 

அதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடை பெறும் குற்றங்களைத் தடுக்க, காவல் துறையில் சிறப்பு அதிரடிப்படை (ரோமியோ ஸ்கோட்) அமைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் உத்தர பிரதே சமாநிலத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அறிவித்தார்.

இந்தநிலையில்,  அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க யோகிஆதித்யநாத் அரசு பல்வேறு அடுத்த அடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில். 50 வயதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

மேலும் முறையாக பணி செய்யாத 50 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதனை பின்பற்றபடவில்லை என்றும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.