மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நாளை தாக்கல்? + "||" + Lokayukta Bill to be submitted today

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நாளை தாக்கல்?

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நாளை தாக்கல்?
தமிழக சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தா சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், மே 29-ஆம் தேதி தொடங்கிய நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைகிறது. இதனால், ஏற்கனவே பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சில சட்டம் முன் வடிகள், சட்ட மசோதாவாக நாளை நிறைவேற்றப்பட உள்ளன. 

இதில், லோக் ஆயுக்தா சட்ட மசோதாவும் நாளை  பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.