உலக செய்திகள்

ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு + "||" + Torrential rains kill at least 88 in western Japan

ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு
ஜப்பானின் மேற்கே ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
குராஷிகி,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 88 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.  58 பேரை காணவில்லை.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

வெள்ளத்தில் வீடுகள் பல அடித்து போய்விட்டன.  2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லை.  தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  2,310 பேர் நேற்று மாலை வரை மீட்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து இன்றும் சில பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நில சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பலர் தங்களது வீடுகளில் சிக்கி உள்ளனர்.  சிலர் மேற்கூரைகளில் தங்கியுள்ளனர்.
வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண் மையம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் அமைத்துள்ளது.

ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பிரதமர் ஷின்ஜோ அபே கூறும்பொழுது, இன்னும் நிறைய பேரை காணவில்லை.  பலருக்கு உதவி தேவையாக உள்ளது.  தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என கூறினார்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் சாலைகள் மூடப்பட்டு உள்ளன.  சில பகுதிகளில் ரெயில் சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன.  கடந்த வெள்ளி கிழமை ஷின்கான்சென் பகுதியில் ரத்து செய்யப்பட்ட புல்லட் ரெயில் சேவை ஆனது மீண்டும் தொடங்கப்பட்டு குறிப்பிட்ட நேரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 38 அடியாக உயர்வு
கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளது.
2. மாவட்டத்தில் தொடர் மழை: குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
3. தொடர் மழை எதிரொலி: 64 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4. தொடர் மழை எதிரொலி: சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
தொடர் மழை காரணமாக, கடைமடை பகுதியில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
5. தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதம்
தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதமடைந்து உள்ளன. மண்சரிவு ஏற்பட்டதால் அந்தரத்தில் வீடுகள் தொங்கி கொண்டு இருக்கின்றன.