தேசிய செய்திகள்

உ.பி.யின் பாக்பட் சிறையில் பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக் கொல்லப்பட்டார் + "||" + Gangster Munna Bajrangi shot dead in UP's Baghpat Jail

உ.பி.யின் பாக்பட் சிறையில் பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக் கொல்லப்பட்டார்

உ.பி.யின் பாக்பட்  சிறையில் பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக் கொல்லப்பட்டார்
உத்தரபிரதேச பாக்பட் சிறைச்சாலையில் வைத்து பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக் கொலை செய்யபட்டார்.
பாக்பட் 

1990 களில் ஆதிக்கம் செலுத்தியவன்  பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி  இன்று காலை  உத்தரப்பிரதேசத்தின் பாக்பாட்  சிறைச்சாலையில்  வைத்து  சக  கைதியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சில நாட்களுக்கு முன் பஜ்ரங்கியின்   மனைவி சீமா சிங்  தனது கணவர் போலி என்கவுண்டரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டபடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் குற்றம்சாட்டிய   சில நாட்களில்    இந்த கொலை நடைபெற்று உள்ளது.

பிரேம் பிரகாஷ் சிங் என்ற முன்னா பஜ்ரங்கியை  ஒரு மிரட்டல் வழக்குக்காக  பாக்பட்டில் இருந்து  ஜான்சிக்கு மாற்றப்பட இருந்தார். 

இன்று காலை 5.30 மணி அளவில் அவருக்கு டீ கொடுக்கும் போது  அவர் சுட்டுக்கொல்லபட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த  உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

சிறைச்சாலை வளாகத்திற்குள் நடக்கும் ஒரு சம்பவம் ஒரு முக்கியமான விஷயம். இது சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், 'என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்  நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

காசிபூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ராய் 2005 ல் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியாக பஜ்ரங்கி இருந்தார்.