உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் + "||" + Dh1,000 fine for wasting food in Saudi Arabia proposed

சவுதி அரேபியாவில் பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம்

சவுதி அரேபியாவில் பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம்
சவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் உணவு பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே இனி சவுதி அரேபியாவில் வீண்டிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சட்டமானது உணவு பதப்படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சட்டத்தை மீறும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் வேளாண் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள்
முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள் . 1000க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
2. ஓட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது
சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தால் 5 ஆண்டு சிறை ரூ.5.60 கோடி அபராதமும் விதிக்கப்படும்
சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்வது இந்தியாவில் பெருகி வருகிறது. அதே நேரத்தில் இப்படி கேலி, கிண்டல் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபியாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. சமூக வலைத்தளங்கள் வழியாக கிண்டல் செய்தால் 5 ஆண்டுகள் சிறை, ரூ.56 லட்சம் அபராதம் - சவுதி அரசு
பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவுதி அரசு அறிவித்துள்ளது.
5. போராட்டக்களத்தில் புன்னகைப் பூக்கள்
சவுதி அரேபியா, பணக்கார நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் அங்கு பெண்களின் வாழ்க்கைத்தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை.