உலக செய்திகள்

தேர்தலில் ஓட்டு வாங்க என்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் - விஜய் மல்லையா + "||" + Vijay Mallya shrugs off threat of British asset seizures

தேர்தலில் ஓட்டு வாங்க என்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் - விஜய் மல்லையா

தேர்தலில் ஓட்டு வாங்க என்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் - விஜய் மல்லையா
இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க என்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என விஜய் மல்லையா குற்ரஞ்சாட்டி உள்ளார். #VijayMallya
லண்டன்

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 61). இவர் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார். அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்  தனது சொத்துக்களை தர தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் லண்டனில் இருக்க கூடிய சொத்துக்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை தன் தாயார் மற்றும் குழந்தைகளின் சொத்து என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 

தன்னுடைய பெயரில் சில கார்களும், நகைகள் மட்டுமே இருப்பதாகவும், நேரம் அறிவித்துவிட்டு, வீட்டுக்கு வந்தால்,  அதை தர தான் தயாராக இருப்பதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரை தாம் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.