உலக செய்திகள்

தாய்லாந்து குகையில் இருந்து மேலும் ஒரு சிறுவன் பத்திரமாக மீட்பு + "||" + Fifth Boy Rescued From Thai Cave, Seen On A Stretcher

தாய்லாந்து குகையில் இருந்து மேலும் ஒரு சிறுவன் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து குகையில் இருந்து மேலும் ஒரு சிறுவன் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து குகையில் இருந்து மேலும் ஒரு சிறுவன் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். #Thailandcave
பாங்காங்

தாய்லாந்தில் தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக நேற்று மீட்டு வந்தனர். மீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்றுகாலை  தொடங்கியது.

தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வருவதாக திட்டமிடப்பட்டு உள்ளது. 

 தற்போது வரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு