மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மரியாதை + "||" + TN cm EPS and OPS pay tribute at jaye memorial

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மரியாதை
22 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது.

இதுவரை 22 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது. ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தா உள்ளிட்ட முக்கிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 


தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டர்கள் பாரதிராஜா, விஜய் ; ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதில் 3 டைரக்டர்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
2. ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி? - வெங்கையா நாயுடு பதில்
ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படிப்பட்டவர்கள்? என்ற கேள்விக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.
3. ஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை
ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரே மாதிரியான சந்தனப் பேழையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
4. ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது, ஒருவரே...
மறைந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது ஒருவரே.
5. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்: அக்டோபர் 24-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள ஆணையம் அக்டோபர் 24-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.