சினிமா செய்திகள்

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை நடிகர் திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது நிறுத்து வைப்பு - மோகன் லால் + "||" + Dileep will stay outside AMMA till his innocence is proved, says Mohanlal

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை நடிகர் திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது நிறுத்து வைப்பு - மோகன் லால்

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை  நடிகர் திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது நிறுத்து வைப்பு - மோகன் லால்
குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை நடிகர் திலீப்பை அம்மா நடிகர்கள் சங்கத்தில் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக மோகன்லால் கூறி உள்ளார். #Mohanlal #AMMA #Dileep
கொச்சி

மலையாள நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பு ஏற்றதும் முதல் வேலையாக நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் நீக்கி வைக்கப்பட்டு இருந்த திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து முன்னணி கதாநாயகிகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். 

மேலும் 14 நடிகைகள் நடிகர் சங்க முடிவை கண்டித்தனர். குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். கேரள மகளிர் ஆணையமும் மோகன்லால் முடிவை விமர்சித்தது. பொதுக்குழுவில் ஒருமனதாக தீலிப்பை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாக மோகன்லால் விளக்கம் அளித்தார். 

திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது

இந்த நிலையில்   மலையாள நடிகர்கள் அம்மா சங்க தலைவர்  கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் 24 ம் தேதி திலீப் மீண்டும் சங்கத்தில் இணைவதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மித்த  முடிவு எடுக்கப்பட்டது. திலீப் தான் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேரவில்லை என கூறி உள்ளார்.

சினிமா பெண்களின் கூட்டு குழுவின் எந்த உறுப்பினரும் (WCC) பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  திலீப் அகற்றப்பட்ட விவகாரம் விவாதத்திற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக  உள்ளடக்கப்பட்டிருந்தது."எவ்வாறாயினும், எந்தவொரு பிரச்சினையிலும்  சினிமா பெண்களின் கூட்டு குழுவுடன் (WCC)  உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

அம்மா  எப்போதும் பெண் நடிகர்களுக்கு துணையாக  இருக்கும் என மோகன்லால் மீண்டும் வலியுறுத்தினார். இந்த வழக்கில் இருந்து திலீப் விரைவில் விடுபட்டு வரவேண்டுமென  விரும்புகிறேன். என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்
ஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
2. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.
3. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
4. பேட்ட - விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ரஜினிகாந்தின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
5. பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார். இறுதிச் சடங்குகள் கனடாவிலேயே நடைபெறும்.