தேசிய செய்திகள்

”டெல்லி அருகே உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை” பிரதமர் மோடி துவங்கி வைத்தார் + "||" + PM Modi Opens World's Largest Cellphone Factory Near Delhi

”டெல்லி அருகே உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை” பிரதமர் மோடி துவங்கி வைத்தார்

”டெல்லி அருகே உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை” பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். #PMmodi
நொய்டா, 

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் பிரபல சம்சங் செல்போன் நிறுவனத்தின்  தொழிற்சாலை 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையான இதை, பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 120 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறனை கொண்டதாகும். 

நொய்டாவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையை பிரதமர் மோடி மற்றும்  தென்கொரிய அதிபர்  மூன் ஜே இன் ஆகியோர் துவங்கி வைத்தனர். முன்னதாக, மேற்கூறிய செல்போன் தயாரிப்பு  தொழிற்சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் நொய்டாவுக்கு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். 

மெட்ரோ ரயிலில் அருகருகே அமர்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபரும் மெட்ரோ ரயிலில் நின்ற பயணிகளுக்கு கை அசைத்தனர். பயணிகளும் பிரதமர் மோடியை, கண்டதும் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் சிங்கப்பூரில் இன்று வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2. முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு
முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது என்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசினார்.
3. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் : பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார்.
5. நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது -ராகுல் காந்தி
நாடு மக்களால் நடத்தப்படுகிறது. ஒரு மனிதரால் அல்ல என்பது கூட மோடிக்கு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.