மாநில செய்திகள்

11 கோடி உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக: அமித்ஷா பேச்சு + "||" + amith sha hopes BJP show better performence soon in tamilnadu

11 கோடி உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக: அமித்ஷா பேச்சு

11 கோடி உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக: அமித்ஷா பேச்சு
11 கோடி உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாக பாரதீய ஜனதா விளங்குகிறது என்று அமித்ஷா பேசினார்.
சென்னை,

சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சவாடி பொறுப்பாளர்கள் நிலையிலான 16 ஆயிரம் பேர்  கலந்து கொண்ட  கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது  அமித்ஷா பேசியதாவது- கைகளை மூடி தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அனைவரும் முழங்க வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும்.  தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல் கேலி செய்தார்கள். மார்ச் மாதத்துக்குள் பாஜக எங்கு இருக்கிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள். 

 2014-ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். பொன்.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்த தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மோடி அரசின் மக்கள் சேவையினால் பாஜக மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. 10 கோடி ஏழைகளின் ஆசைகளை பூர்த்தி செய்தது பாஜக அரசு. 70 ஆண்டுகளில் முந்தைய அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்து இருக்கிறது. 

பாஜகவிற்கு 330 -க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உள்ளனர். 2019 நடாளுமன்ற தேர்தலில் பாஜக வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும்.11 கோடி உறுப்பினர்களுடன்  மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது. முந்தைய அரசுகளை விட தமிழகத்திற்கு அதிக நிதியை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும். மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு 35 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...