தேசிய செய்திகள்

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை ; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் + "||" + Mumbai Schools, Colleges Shut Over Heavy Rain Warning; Trains Hit

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை ; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை ; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
கனமழையால் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #HeavyRain
மும்பை, 

மராட்டியத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6)  முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது.  4–வது நாளாக  இன்றும் மழை நீடித்தது. மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக மும்பையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.மும்பையில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றிபெற்றன.
2. மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ஐகோர்ட்டில் 1,000 விவசாயிகள் எதிர்ப்பு
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தினால் விளைவுகளை எதிர்க்கொள்ளும் 1000 விவசாயிகள் ஐகோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
3. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, மீண்டும் 72 -ஐ தாண்டியது
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 காசுகள் சரிவை சந்தித்துள்ளது.
4. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாடட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது.
5. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவை சந்தித்துள்ளது.