உலக செய்திகள்

தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு + "||" + Brazil Fans 'Welcome Back' Players By Throwing Stones At Team Bus

தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு

தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. #FIFAWorldCup2018
ரியோடிஜெனீரோ, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இந்த நிலையில் பிரேசில் கால்பந்து அணி நாடு திரும்பியது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பஸ்சில் செல்வதை அறிந்த ரசிகர்கள் அந்த பஸ்சை சூழ்ந்து கொண்டு, முட்டை மற்றும் கற்களை வீசி தாக்கினார்கள். ரசிகர்களின் ஆக்ரோ‌ஷ தாக்குதல் அதிகமானதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.