மாநில செய்திகள்

எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு + "||" + Postponing of the date of assembly

எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சியினர் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
சட்டசபை கூட்டம் நிறைவு அடைந்ததை தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை, 

சட்டசபை கூட்டம் நிறைவு அடைந்ததை தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டசபையில் சபாநாயகர் தனபால் பேசியதாவது:–

15–வது பேரவையின் 4–வது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 8–1–2018 அன்று தொடங்கி 12–1–2018 வரையும், இரண்டாவது கூட்டம் 15–3–2018 அன்று தொடங்கி, 22–3–2018 வரையும் நடைபெற்று உள்ளது. மூன்றாவது கூட்டம் 29–5–2018 அன்று தொடங்கி இன்று (நேற்று) வரை நடைபெற்றுள்ளது.

பேரவை கூடிய மொத்த நாட்கள் 33, மாலையிலும் பேரவை கூடிய நாட்கள்–1, அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் 183 மணி 43 நிமிடம் (இது பகல் 3 மணி வரை). மானியக்கோரிக்கைகள் விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்ற மொத்த நாட்கள்–23. உரையாற்றிய உறுப்பினர்கள்–129. உரையாற்றிய நேரம்–60 மணி 32 நிமிடம்.

அதில் ஆளுங்கட்சியினர் 68 பேர் (பேசிய நேரம் 24 மணி 05 நிமிடம்), எதிர்க்கட்சியினர் 61 பேர் (பேசிய நேரம் 36 மணி 27 நிமிடம்). எதிர்க்கட்சியினருக்குக் கூடுதலாக 12 மணி 22 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த நான்காவது கூட்டத்தொடரில், கவர்னர் உரை விவாதம், வரவு–செலவுத் திட்ட பொது விவாதம் மற்றும் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றில், விவாதம் நடைபெற்ற மொத்த நேரம் 82 மணி 28 நிமிடங்கள்.

19–7–2017 முதல் 9–7–2018 வரை கேள்வி நேரத்தில் அதிக வினாக்களை தொடுத்தவர்கள் கே.எஸ்.மஸ்தான் (தி.மு.க.), அன்பழகன் (தி.மு.க.), பிரபு (அ.தி.மு.க.) ஜே.ஜி. பிரின்ஸ் (காங்கிரஸ்), ராமச்சந்திரன் (தி.மு.க.), 4–வது கூட்டத்தொடரில் சந்திரபிரபா மற்றும் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் ஆகியோர் 4 மூல வினாக்களைக் கேட்டு முதல் நிலையில் உள்ளனர். 3 மூல வினாக்களைக் கேட்டு 26 உறுப்பினர்கள் இரண்டாம் நிலையிலும், இரண்டு மூல வினாக்களைக் கேட்டு 72 உறுப்பினர்கள் மூன்றாம் நிலையிலும் உள்ளனர்.

8–10–2018 முதல் 9–7–2018 வரை பேரவைக்கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் பேரவைக்கு வந்த உறுப்பினர்கள் பட்டியலில் 48 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தொடர் சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்னுடைய கடமையாகும். பேரவையின் கூட்டத் தொடர் இனிதே நிறைவு பெறும் இந்நாளில் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.