மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை + "||" + The Government of Tamil Nadu should take action GK Vasan's report

ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை

ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை
ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கான ஊதியத்தை மாத மாதம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை இன்னும் அரசு நிறைவேற்றாத நிலையில் ரேஷன் கடைகள் இயக்கப்படாது என அறிவித்துள்ளனர்.

இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே நம்பி இருக்கின்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பம் தான். எனவே தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ரேஷன் கடைகள் திறந்திருக்க வேண்டிய நாட்களில் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், ரேஷன் பொருட்கள் கடத்தப்படாமல் இருப்பதற்கும், ரேஷன் கடைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.