மாநில செய்திகள்

நகர குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ. 58,356 கோடியில் 9 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு + "||" + 9 lakh houses will be built Announcing O. Panneerselvam

நகர குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ. 58,356 கோடியில் 9 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

நகர குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ. 58,356 கோடியில் 9 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
நகர குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு ரூ.58,356.40 கோடியில் 9 லட்சத்து 8 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை, 

சட்டசபையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் - 2023 குடிசைப்பகுதிகள் இல்லாத நகரங்களை உருவாக்கும் திட்டத்தின்கீழ் நகர குடிசை பகுதிவாழ் குடும்பங்களுக்கு ரூ.58,356.40 கோடி மதிப்பீட்டில் 9.08 லட்சம் குடியிருப்புகள், வீடுகள், மைய-மாநில அரசு நிதி உதவியுடன் கட்டப்படும்.

* பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.4,247.87 கோடி செலவில் 38 ஆயிரத்து 617 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

* உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ.4,648 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர ஏழைகளுக்கான வீட்டு வசதி மற்றும் உறைவிட மேம்பாட்டுக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 72 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் மேம்படும் வகையில், ரூ.70 கோடி செலவில் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.274.74 கோடி மதிப்பீட்டில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும்.

* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் சென்னை அரும்பாக்கத்தில் 7.14 ஏக்கரில் ரூ.690 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படும்.

* சொந்த வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் இத்துறையின்கீழ் உள்ள துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக சென்னை பாடி குப்பத்தில் 182 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* தனியார் நிலங்களை புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் நில உரிமையாளர்களிடம் இருந்து பெற்று, அதனை ஒருங்கிணைத்து அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி, பின்னர் நிலத்தின் விலை மற்றும் அபிவிருத்தி விலையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட நிலத்தை பகிர்ந்து கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் பிரதான இடமான பட்டினப்பாக்கத்தில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.

* தேனி, விருதுநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் கட்டப்படும்.

* தொழிற்சாலைகளுக்கு மனை அடைப்பு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும், தரைப்பரப்பு குறியீட்டை 1-ல் இருந்து 1½ ஆகவும் உயர்த்தப்படும்.

* தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நகர் ஊரமைப்பு துறையின் 23 சார்நிலை அலுவலகங்களுக்கு ரூ.35.22 கோடி செலவில் சொந்த அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.

* வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள நிலங்களுக்கான ஒருங்கிணைந்த மனைப்பிரிவு மேலாண்மை திட்டம் உருவாக்கப்படும்.

* கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான போக்குவரத்து மேம்பாடு மற்றும் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

* நில உபயோக தகவல் தொகுப்பு முற்றிலுமாக கணினிமயமாக்கப்படும்.

* சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளை கூராய்வு செய்ய ஏதுவாக ஒருங்கிணைந்த வழக்குகள் கண்காணிப்பு முறை அமைக்கப்படும்.

* சென்னை பெருநகர் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு பின்னல் வலை சாலை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்படும்.

* வளர்ச்சி உரிமை மாற்ற சான்றிதழ் ‘டிமேட்’ படிவத்தில் வழங்கப்படும்.

* ஒப்புதல் பெற்ற மனைப்பிரிவில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட திட்ட அனுமதி வழங்கப்படும்.

* 10 ஆயிரம் சதுரஅடிக்கு உட்பட்ட வளர்ச்சிகளுக்கு திட்ட அனுமதி 30 நாட்களில் வழங்கப்படும்.

* சாலைகள் அகலப்படுத்தும் திட்டங்களில் பெறப்படும் உயர்தள பரப்பு குறியீட்டுக்கு செலுத்தப்படும் கட்டணங்களின் ஒரு பகுதியை சாலைகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் வழிமுறைகளை வகுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* மெட்ரோ ரெயில் வழித்தடங்களையொட்டி, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிகளை ஊக்குவிக்க சிறப்பு வளர்ச்சி விதிகள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.