உலக செய்திகள்

ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு + "||" + Death toll from torrential rain in western Japan rises to 126

ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு
ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வடைந்து உள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த வியாழ கிழமையில் இருந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரது வீடுகள் மூழ்கியுள்ளன.  பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.  50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லை.  தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  நில சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பலர் தங்களது வீடுகளில் சிக்கி உள்ளனர்.  சிலர் மேற்கூரைகளில் தங்கியுள்ளனர்.

வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண் மையம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் அமைத்துள்ளது.  மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இந்த நிலையில் ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வடைந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதம்
தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதமடைந்து உள்ளன. மண்சரிவு ஏற்பட்டதால் அந்தரத்தில் வீடுகள் தொங்கி கொண்டு இருக்கின்றன.
2. மியான்மரில் சுரங்கத்தில் நில சரிவு; 27 தொழிலாளர்கள் பலி
மியான்மர் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 27 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.
3. ஜப்பானில் தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு
ஜப்பானின் மேற்கே ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
4. தொடர் மழையால் ஊட்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு - சாலையில் திடீர் பள்ளம்
தொடர் மழையால் ஊட்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. சாலையில் திடீர் பள்ளம் காணப்பட்டது.
5. தொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல்
தொடர் மழையால் கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.