உலக செய்திகள்

தாய்லாந்து: மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் உள்ளனர்; பொது சுகாதார அமைச்சகம் தகவல் + "||" + Eight boys rescued from Thai cave in 'good mental state': official

தாய்லாந்து: மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் உள்ளனர்; பொது சுகாதார அமைச்சகம் தகவல்

தாய்லாந்து:  மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் உள்ளனர்; பொது சுகாதார அமைச்சகம் தகவல்
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் உள்ளனர் என பொது சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மீசாய்,

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையை பார்வையிடுவதற்காக சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் அதில் சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணிகள் ஞாயிற்று கிழமை தொடங்கியது.  இதில் 4 சிறுவர்கள் முதலில் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று நேற்று மற்றுமொரு 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.  இதனால் மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்தது.  இன்னும் 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி நடைபெற உள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் நல்ல நிலையில் உள்ளது என பொது சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர செயலர் ஜெசடா கூறியுள்ளார்.