மாநில செய்திகள்

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவு + "||" + For students who have written in Tamil 196 to give grace marks Madurai HC order

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சிபிஎஸ்இக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு. #NEET
மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள். தமிழில் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற கிளைஉத்தரவிட்டது.

மேலும், 2 வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், சிபிஎஸ்இக்கு சிக்கல் எழுந்துள்ளது.