தேசிய செய்திகள்

லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு + "||" + Lok Ayukta Act Complete in 2 months Supreme Court orders the Tamil Nadu government

லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில்  முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. #LokAyukta #TNAssembly #SupremeCourt
புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற் படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதுடன், அதுகுறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது

அதன் அடிப்படையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக தமிழக அரசு பிரமாண பத்திரம்  தாக்கல் செய்தது. 

இதனை ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில்  முழுமையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு  உத்தரவிட்டு உள்ளது.