தேசிய செய்திகள்

துணி துவைப்பது போல் குழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த தந்தை + "||" + Horror video from Hyderabad Father flings 3-yr-old son against autorickshaw

துணி துவைப்பது போல் குழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த தந்தை

துணி துவைப்பது போல் குழந்தையை ஆட்டோவில் தூக்கி அடித்த தந்தை
தந்தை ஒருவர் பெற்ற மகனை குடிபோதையில் ஆட்டோவில் தூக்கி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஸ்ரீனிவாச காலனியில் வசித்து வந்தவர்  சிவா கவுட்  தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். அந்த நபர் போதைக்கு அடிமையானதோடு தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிவா , தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே கோபத்தில் வீட்டிற்குள் படுத்து இருந்த குழந்தையை வெளியே இழுத்து  வந்து முதலில் அந்தரத்தில் தூக்கி வீசி உள்ளார். பின்னர்  அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார்.  துணியை  துவைப்பது போல் அவர் குழந்தையை தூக்கி  ஆட்டோவில் தலைகீழாக அடித்து உள்ளார். இதனால் குழந்தை அசைவற்று தரையில் கிடந்து உள்ளது. இதைபார்த்த  தயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  அவர் குழந்தையை தூக்கி கொண்டு அவர்களிடம் கொடுக்க மறுக்கிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு நீலோபர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளது.

இது குறித்து அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ரெட்டி கூறியதாவது:-

இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிவன் ஓடிவிட்டார் நாங்கள் அவரை பிடிக்க  முயற்சி செய்து வருகிறோம். இந்த சம்பவம் நடந்த போதிலும், அந்த குழந்தையின் தாய் புகார் செய்யவில்லை. ஆனால் நாங்கள் ஒரு சூ-மோட்டோ வழக்கு பதிவு செய்து உள்ளோம் என்று  கூறினார்.