உலக செய்திகள்

11 சிறுவர்கள் மீட்பு தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மொத்தமும் இன்றே நிறைவடையும் கடற்படை நம்பிக்கை + "||" + Tenth boy rescued; 2 boys and coach remain

11 சிறுவர்கள் மீட்பு தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மொத்தமும் இன்றே நிறைவடையும் கடற்படை நம்பிக்கை

11 சிறுவர்கள் மீட்பு தாய்லாந்து குகையில்  மீட்புப் பணி மொத்தமும் இன்றே நிறைவடையும்  கடற்படை நம்பிக்கை
தாய்லாந்து குகையில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணி மொத்தமும் இன்றே நிறைவடையும் என கடற்படை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave #Thailand
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நேற்று 4 சிறுவர்களும் இன்று 3 சிறுவர்களும் என  மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு சிறுவனுக்கும் 2 நீர் மூழ்கி வீரர்கள்  வீதம் மீட்பு பணிகள் தொடர்கிறது.  மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மீட்கப்பட்ட 11 சிறுவர்களும் மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க உடல் நலத்துடன் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் சிலர் 'மகிழ்ச்சி' என்றும், குடும்பத்தைப் பிரிந்து வாடுவதாகவும் தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு சிலர் மட்டும் கண்ணாடி வழியாக குடும்பத்தினரை சந்தித்தனர்.

மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 10.08 மணிக்கு தொடங்கியது.

19 நீர் மூழ்கி வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். நிலைமை சாதகமாக இருந்தால், மீதமுள்ள சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர், அவர்களோடு தற்போது உள்ள ஒரு டாக்டர், கடற்படை முக்குளிக்கும் வீரர்கள்  இன்றே வெளியில் வருவார்கள்.

இன்றைய மீட்புப் பணி முந்தைய நாளைவிட நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்றும், ஆனால், இன்றே மீட்புப் பணி மொத்தமும் நிறைவடையும் என்று நம்புவதாகவும் கடற்படை சீல்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...