தேசிய செய்திகள்

சாதாரண மக்களே என்னுடைய வழிகாட்டி, என்னுடைய போராட்டம்தான் ஊக்கம் - இதுதான் மம்தா! + "||" + My mentors are the common people Mamata Banerjee

சாதாரண மக்களே என்னுடைய வழிகாட்டி, என்னுடைய போராட்டம்தான் ஊக்கம் - இதுதான் மம்தா!

சாதாரண மக்களே என்னுடைய வழிகாட்டி, என்னுடைய போராட்டம்தான் ஊக்கம் - இதுதான் மம்தா!
மக்களே என்னுடைய வழிகாட்டி ஆவார்கள் என மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee
புதுடெல்லி,

மத்திய மந்திரி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி என்று எத்தனை பதவிகள் கிடைத்தாலும் மம்தா பானர்ஜி என்றும் தன்னுடைய எளிமையை விட்டது கிடையாது. மேற்கு வங்காளத்தில் மக்களுடன் போராட்டக்களமாக இருக்கட்டும், அரசியல்களமாகட்டும் பல்வேறு நிலைகளிலும் ஆற்றல், சோர்வறியாத பண்பு, விரைந்து சிந்திக்கும் திறன், துணிச்சல் என தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறார். மேற்கு வங்காளத்தில் இடதுசாரி முன்னணி என்ற 30 ஆண்டுக்கு மேலான அரசியல் இயந்திரத்தை உடைத்து ஆட்சியை கைப்பற்றினார். இன்று வரையில் அங்கு அனைத்து தேர்தல்களிலும் அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளார். 

2011 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தபின்னர் சாரதா சிட் ஃபண்ட் ஊழல் முதல் லஞ்ச பேர வீடியோ விவகாரம் வரையில் திரிணாமுல் காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும், வெளிப்படையாகவே மக்களிடம் மன்னிப்பை கோரினார். இனி, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளித்தார். “என்னுடைய ஆட்சியில் தவறு ஏதேனும் நடந்தால் அதற்கு நான்தான் பொறுப்பு. அதற்காக என்னுடைய கட்சிக்கு ஆதரவு அளிப்பதையும் எனக்கு ஆசி வழங்குவதையும் நிறுத்திவிடாதீர்கள்” என்றார். இதற்கிடையே 2014 பாராளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளை தனதாக்கினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியை தனதாக்கினார். 

2016 முடிவுகள் அவருக்கு மிகவும் சாதகமாக வந்த பிறகும், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற கர்வமோ, பெருமிதமோ, மகிழ்ச்சியோ அவருடைய முகத்தில் தென்படவில்லை. திரிணமூல் கட்சியின் தலைவர்களில் அவர்தான் மக்களிடையே அதிகம் செல்வாக்குள்ளவர் ஆவார். இன்றும் மக்களை சந்திப்பதை அவர் நிறுத்தியது கிடையாது, பாதுகாப்பு அச்சம் என்றாலும் அதனை ஒரு பொருட்டாகவே எடுப்பதும் கிடையாது. இப்போது 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று பெரும் பணியை கையில் எடுத்துள்ளார். இதில் மூன்றாவது அணியா? காங்கிரசுடன் செயல்படுவதா? என்ற முக்கியமான முடிவையும் அவர் எடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு விரிவான பேட்டியை கொடுத்துள்ள மம்தா பானர்ஜியிடம் உங்களுடைய வழிகாட்டி யார்? உங்களுக்கு ஊக்கமளிப்பது என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ளார். எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவருடைய பதில் இருந்தது. என்னுடைய வழிகாட்டியெல்லாம் சாதாரண மக்கள் மட்டும், என்னுடைய போராட்டங்களே எனக்கு ஊக்கமளிக்கிறது. என்னுடைய பெற்றோர் வசதிபெற்றவர்கள் கிடையாது, அவர்கள் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு அவர்களால் ஆங்கில வழி கல்வியை எல்லாம் கொடுக்க முடியவில்லை, ஆனால் நல்ல வாழ்க்கை பாடத்தை கொடுத்தார்கள். 

ஒற்றுமை, ஒருமைப்பாடு, எல்லோரையும் நேசித்தல், எல்லோருக்காகவும் யோசித்தல், எல்லோருக்கும் பேசுவதும், ஒன்றாக இருப்பதும், யாரையும் வெறுப்பதும் இல்லை என்பதே நான் படித்த பாடம். முதலில் ஒரு நல்ல மனிதராக இருங்கள், பிறகு உங்கள் அரசியலை நடைமுறைப்படுத்துங்கள். இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதற்கு உங்களுடைய ஆரம்பமே காரணம் என கூறியுள்ளார்.