தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது + "||" + Theft at P Chidambaram s Chennai house 2 arrested

ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது

ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்கள் கைது
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை–பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ள முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியது. அப்போது ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  அவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் தரபில் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே திருட்டுப்போன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து திடீரென் நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எக்ஸ்பிரஸ் ரெயிலில் கண்ணாடிகள் திருட்டு : கழிவறை குழாய்களும் உடைத்து சேதம்
பிரகதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. மேலும் கழிவறை குழாய்களையும் பயணிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
2. கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி - ப.சிதம்பரம் பேட்டி
கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
3. தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்
தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
4. ஜெயங்கொண்டத்தில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஜெயங்கொண்டத்தில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
5. கோயம்பேடு பகுதியில் சங்கிலி பறிப்பு-திருட்டு; 2 வாலிபர்கள் கைது
கோயம்பேடு பகுதியில் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.