கால்பந்து

தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல் + "||" + FIFA Says Rescued Thai Boys Won't Attend World Cup Final

தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல்

தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக்  காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல்
தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள் என்று பிபா தெரிவித்துள்ளது. #FIFA
மாஸ்கோ,

தாய்லாந்து தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23–ந் தேதி சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் அவர்களை தேடும் வேட்டை நடந்தது. அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக  கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 4 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரையும் இன்று மீட்ட மீட்புக்குழுவினர், குகைக்கு சீல் வைத்தனர். மீட்கப்பட்ட அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக  செய்திகள் வெளியாகியுள்ளன.  குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது அவர்களது குடும்பங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாய்லாந்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இந்த நிலையில், குகைக்குள் இருந்து பத்திரமாக சிறுவர்கள் மீட்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக கால்பந்து சம்மேளனம் (ஃபிபா), குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால், அவர்கள் உலக கோப்பையின் இறுதிப்போட்டியை காண அழைத்து வரப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கடந்த வாரம் பிபா தலைவர் ஜியான்னி இன்பண்டினோ, குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும் அவர்களை உலக கோப்பை கால்பந்து  இறுதிப்போட்டியைக்காண சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வர விரும்புகிறோம் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவ காரணங்களால், மாஸ்கோ வரை பயணம் செய்ய இயலாத நிலையில், சிறுவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஃபிபா தெரிவித்துள்ளது.